என்னை வாழவைத்த தெய்வங்கள்! நீங்கள் இல்லாமல் நான் இல்லை! உருக்கமாக நன்றி கூறிய நடிகர் ரஜினி! ஏன் தெரியுமா?



rajini-melts-and-thanking-to-his-fans

இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி இயக்குனர்களின் வெற்றித் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறக்கிறார்.

ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கும் அவரது நடை, உடை,  ஸ்டைல், அவர் பேசும் வசனங்கள் என அனைத்திற்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தால் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். மேலும் மோகன்லால், மம்மூட்டி முதல் சிவகார்த்திகேயன் வரை ஒன்றிணைந்து காமன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பதைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி நீங்கள் இல்லாமல் நான் இல்லை என பதிவிட்டுள்ளார்.