மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி; கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
நெல்சனின் இயக்கத்தில், அனிரூத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் 10 ஆகஸ்ட் 2023 அன்று திரையரங்கில் வெளியாகிறது. வரும் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு விழா நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரஜினிகாந்தின் பாகங்கள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன.
இதனையடுத்து, ரஜினிகாந்த் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் டி.ஜெ ஞானவேலின் படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பது உறுதியானது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் (Thalaivar 171) நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளது உறுதியாகி, இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2024 ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.