பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சிறுத்தை சிவாவுடனான ரஜினியின் திடீர் சந்திப்பு அடுத்த படத்திற்கான அஸ்திவாரமா?
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. பேட்ட படத்திற்கு பிறகு AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இதனிடையே சமீபத்தில் விசுவாசம் படத்தை பார்த்த ரஜினிகாந்த், தந்தை மகளின் பாசப்போராட்டத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்திய சிறுத்தை சிவாவின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சிறுத்தை சிவாவை சந்திக்க எண்ணிய ரஜினிகாந்த் அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் சினிமாவைப் பற்றி ஆலோசித்துள்ளார்.
சிறுத்தை சிவாவை திடீரென சந்தித்த ரஜினிகாந்தின் நடவடிக்கை அடுத்த படத்திற்கான அடித்தளமா என்று எண்ணத் தோன்றுகிறது. தர்பார் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. மேலும் நாளை மறுநாள் இந்திய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்க உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் ரஜினி. இந்நிலையில் இந்த திடீர் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தற்போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகளை கவனித்து வருகிறார் சிவா. தர்பார் படத்தின் படப்பிடிப்பு தூங்குவதற்கு முன்பாகவே இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரையும் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் ரஜினிகாந்தின் அடுத்த படம் கே.எஸ் ரவிகுமாருடனா சிறுத்தை சிவாவுடனா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.