மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்க்கும் அவர் தந்தைக்கும் என்ன பிரச்சனை? எல்லா பிரச்சனைக்கும் இவர்தான் காரணமா?
தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு என்று ஒரு இடம் உண்டு. தனக்கென ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக வலம் வருகிறார்.
தளபதி விஜயின் வளர்ச்சியில் அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகருக்கு முக்கிய பங்கு உண்டு. செந்தூரப்பூவே படத்தில் விஜயகாந்த்க்கு தம்பியாக விஜய் நடிக்க ஆரம்பித்த நாள்களில் இருந்து விஜயின் திரைத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
தளபதி விஜயின் படங்களுக்கான கதைகளை கேட்பது படப்பிடிப்பு தொடர்பான விஷயங்களை கையாளுவது என எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார் அவரது தந்தை. ஆனால் துப்பாக்கி படத்திற்குப் பின் அந்த நிலை மாறியது. தளபதி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா அவர்களின் பேச்சைக் கேட்டு தளபதி விஜய் எல்லா விஷயங்களையும் முடிவெடுக்க ஆரம்பித்தார்.
எஸ்.ஏ சந்திரசேகர் வைத்திருந்த எல்லா ஆட்களையும் நீக்கிவிட்டு புதிய ஆட்களை விஜய் நியமிக்க துவங்கிய போது இருவருக்குமான பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனால் தளபதி விஜய் அவரது குடும்பத்துடன் புதிய வீடு கட்டி தனியாக குடியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போதும் தனது தாய் தந்தையின் மீது அதிக பாசம் கொண்ட விஜய் இந்த காரணத்தினால் தான் தனியே சென்றார் என்று அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து ஒருவர் பத்திரிக்கையிடம் தெரிவித்ததாக கோடம்பாக்கத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.