மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணீட்டிங்களே... ரோஷினி செய்த செயலால் வருத்தத்தில் ரசிகர்கள்...
விஜய் டிவியில் மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன். கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் திடீரென ரோஷினி ஹரிப்ரியன் சீரியலிருந்து விலகினார்.
அவர் சீரியலிருந்து விலகினாலும் ரசிகர்கள் அவரை மறக்காமல் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். தற்போது ரோஷினி ஹரிப்ரியன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் ஜெய்பீம், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை ஆகிய பட வாய்ப்புகளை ஏற்க மறுத்தார் ரோஷினி என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் செங்கேணி, சார்பட்டா பரம்பரை மாரியம்மா கதாபாத்திரம் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார் ரோஷினி.இப்படி தேடி வந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வருமாறும் வேண்டுக்கொள் விடுத்து வருகின்றனர்.