#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரவுடி பேபி.. பயந்து நடுங்கும் ஹன்சிகா! தீயாய் பரவும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! நீங்க பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
நன்கு கொழுகொழுவென இருந்த ஹன்சிகா தற்போது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். அவர் தற்போது ராஜ சரவணன் இயக்கத்தில் ”ரவுடி பேபி” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மீனா, சத்யராஜ், சோனியா அகர்வால், ராய் லட்சுமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Here its the First look poster of - #Rowdybaby - More Updates coming very soon.#RowdybabyTamilMovie@Abhishek_films @jmrajasaravana1 @ihansika #Sathyaraj #ActressMeena #Ramki @soniya_agg @iamlakshmirai @johnkokken1 @samcsmusic @Vairamuthu @chelladurai355 @DeepakDFT pic.twitter.com/AjQmfqvo76
— Nikil Murukan (@onlynikil) April 8, 2022
மேலும் ரவுடி பேபி படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். செல்லதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது ரவுடி பேபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில் ஹன்சிகா அச்சத்துடன் மிகவும் மிரண்டு போய் காணப்படுகிறார்.