பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
"தலையில் கிளாஸூடன் அனிமல் பட பாட்டுக்கு நடனம் ஆடிய சாக்ஷி அகர்வால்!"

பெங்களூரில் மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய சாக்ஷி அகர்வால், அங்கு கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். திரைத்துறையில் நுழைவதற்கு முன்னதாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு அட்லீ இயக்கிய "ராஜா ராணி" படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமான சாக்ஷி, தொடர்ந்து யோகன், ஆத்யன், காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு வரும் 2024ம் ஆண்டு கைவசம் மொத்தம் 5படங்களுக்கு மேல் உள்ளதாகவும், அதில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக களமிறங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி, தற்போது தனது தலையில் கிளாஸை வைத்துக்கொண்டு "அனிமல்" படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.