பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
சிவப்பு நிற சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சாக்ஷி அகர்வாலின் ஹாட் புகைப்படம்..

தமிழ் திரைத்துறையில் கவர்ச்சி கன்னியாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். மாடல் அழகியான சாக்ஷி அகர்வால், தமிழில் முதன் முதலில் 'ராஜா ராணி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் இவருக்கு பெரிதளவில் பெயர் பெற்று தரவில்லை.
இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே இவர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவராக காணப்பட்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னரும் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால் பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், தற்போது சாக்ஷி அகர்வால் சிவப்பு நிற சேலையில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து ரசித்து வருகின்றனர்.