பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
"ராஜா ராணி படப்பிடிப்பில் என்னை ஏமாத்திட்டாங்க" சாக்ஷி அகர்வால் குற்றச்சாட்டு.!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் மக்களிடம் பிரபலமானார். ஆக்சன், வில்லி, கிளாமர் என்று அனைத்து ரோல்களிலும் நடித்து வருகிறார் சாக்ஷி.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சாக்ஷி நடித்து 3 படங்கள் வெளியாகியுள்ளன. எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய 'நான் கடவுள் இல்லை' படத்தில் ஆக்சன் ரோலிலும், பிரபுதேவா நடித்து வெளியான 'பஹீரா' படத்தில், வில்லியாகவும் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ஓடிடி யில் வெளியான 'என் எதிரே ரெண்டு பாப்பா' படத்தில், பயங்கர கவர்ச்சியான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். முன்னதாக அட்லீ இயக்கிய 'ராஜா ராணி' படத்தில், பிளாஷ்பேக் காட்சியில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் சாக்ஷி.
இந்நிலையில் அவரளித்த ஒரு பேட்டியில், " ராஜா ராணி படத்தில் ஆர்யா ஹீரோ. அதில் இரண்டாவது ரோலில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று தான் கேட்டார்கள். இரண்டு நாட்கள் மட்டும் தான் நான் நடித்தேன். நான் இயக்குனரிடம் முன்னேயே என் ரோலை பற்றி பேசியிருக்க வேண்டும்" என்று சாக்ஷி அகர்வால் கூறினார்.