திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாக்ஷி அகர்வாலின் எல்லை மீறும் கவர்ச்சி.. வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் முதன் முதலில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெற்றி அடைந்தாலும் சாக்ஷி அகர்வாலின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.
இதன்பின் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சாக்ஷி அகர்வால். ஆனால் படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனம் செலுத்தப்படவில்லை.
இது போன்ற நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் சாக்ஷி அகர்வால். இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியான பின்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இது போன்ற நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் சாக்ஷி அகர்வாலை அவ்வப்போது ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகை அப்பட்டமாக காட்டி போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.