திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் சாக்ஷியா இது? நம்பவே முடியலை! கிராமத்து கெட்டப்பில் சும்மா சொக்கியிழுக்கும் புகைப்படங்கள்!
தமிழில் ஒருசில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு விளையாடிய இவர் லாஷ்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு ஏரளமான படவாய்ப்புகள் கிடைத்தது. மேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்துவருகிறார். வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்த சாக்ஷி அகர்வால், தற்போது கண்டாங்கி புடவையில் கிராமத்து பெண்ணாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவரை கொண்டாடி லைக்குகளை குவித்து வருகின்றனர்.