மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பைலட் டூ ஹீரோ! மகனுக்காக இயக்குனராக அவதாரமெடுத்த பிரபல நடிகர்! யார்னு பார்த்தீங்களா!!
90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து மக்களிடையே பெருமளவில் பரிச்சயமாகி பிரபல நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் சரண்ராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவர் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் தனது மகன் தேவ்-ஐ ஹீரோவாக களமிறக்கி புதிய திரைப்படத்தை சரண்ராஜ் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தேவ், பைலட்டாக பணியாற்றி வந்தவர். அந்த வேலையில் இருந்து அவர் விலகி பின் நடிப்பு பயிற்சி மேற்கொண்டு தற்போது சினிமா துறைக்கு வந்துள்ளார். மீனவ இளைஞனுக்கும், மார்வாடி பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.