மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆபாசமான கேரக்டர்களில் நடிப்பது எனக்கு செட்டாகாது!" சரண்யா பொன்வண்ணன் மனம் திறந்த பேட்டி!
1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "நாயகன்" திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, சிகப்பு தாலி, தாயம் ஒண்ணு, சகலகலா சம்மந்தி, அஞ்சலி, நான் புடிச்ச மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யா 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அப்போதும், இப்போதும் சரண்யாவின் வெள்ளந்தியான இயல்பான நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் அளித்த பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "நான் நடிக்க வந்த காலத்தில் இருந்தே எனக்கு ஆபாச கெட்டப் போட்டு நடிப்பதில் விருப்பமில்லை. அப்படி உடையணிந்து நடிப்பவர்கள் எல்லாம் தவறானவர்கள் என்று நான் கூறவில்லை. இவை அனைத்தும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தான்.
எனக்கு அந்த மாதிரி உடையணிவது பிடிக்காது. படங்களில் நடிக்க நான் போட்ட ஒரே கண்டிஷன் இதுதான். மேலும் நான் ஹோம்லியாக இருப்பதால் எனக்கு அந்த மாதிரி கேரக்டர்கள் செட்டாகாது என்று கூறி எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகளும் வரவில்லை" என்று சரண்யா கூறியுள்ளார்.