மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம ஜோடிதான்! காதலனை இறுக்க கட்டியணைத்தபடி விஜய் டிவி நடிகை சரண்யா! அழகிய புகைப்படம் இதோ!!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் சரண்யா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நெஞ்சிருக்கும் வரை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்திருந்தார். மேலும் தற்போது புதிதாய் ஒளிபரப்பாகி வரும் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது நடிகை சரண்யா தனது காதலனைக் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.