திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"செல்வராகவனின் அதிரடி ட்விட்" இவருக்கு என்ன ஆச்சு என்று அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..
கோலிவுட் திரையுலகில் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து பிரபல இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த வெளியான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின்பு 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
நடிகராக திரைப்படங்களில் களமிறங்கிய செல்வராகவன், சமீபத்தில் 'பகாசுரன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரும் அளவில் பாராட்டப்பட்டு வந்தது. தற்போது 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இயக்கத்தில் பிஸியாகி இருக்கிறார்.
இதுபோன்ற நிலையில் அடிக்கடி வித்தியாசமாக ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வரும் செல்வராகவன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "யாருக்காகவும் நம்மை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. மாற்றினால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது. கல்லறையில் பொறிக்கும் எழுத்துக்களில் கூட நீ நீயாக தான் இருக்க வேண்டும் என்று ட்விட் செய்து இருக்கிறார். ஏன் இந்த பதிவு என்று ரசிகர்கள் குழப்பத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.