மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாதுகாப்பாக இருங்க!! ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக்! ஏன் தெரியுமா??
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று, டிஆர்பியில் முதலிடத்தில் வந்து பெருமை சேர்த்த தொடர் செம்பருத்தி. இத்தொடரில் அகிலாண்டேஸ்வரியாக நடிக்கும் பிரியா ராமனின் மூத்த மகனாக ஆதி என்ற கேரக்டரில் ஹீரோவாக நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். இத்தொடரை தொடர்ந்து இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
கார்த்திக் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அதனைத் தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் அந்த சீரியலிலிருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக தொகுப்பாளர் அக்னி ஆதியாக செம்பருத்தி தொடர் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது ரசிகர்களை எச்சரிக்கும் விதமாக, இன்ஸ்டாகிராம் தவிர ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட எந்த சோசியல் மீடியாவிலும் நான் இல்லை. தயவுசெய்து போலி கணக்குகளை பின்பற்றாதீர்கள். அந்த அக்கவுண்ட்கள் மீது புகார் அளித்து தக்க நடவடிக்கை எடுங்கள். முதிர்ச்சியுடனும், பாதுகாப்பாகவும் இருங்கள் என தெரிவித்துள்ளார்.