#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. எம்புட்டு அழகு..! சொக்கவைக்கும் பேரழகில் விஜய் டிவி கண்ணம்மா.. வைரலாகும் புகைப்படங்கள்..
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அணைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியல்.
இந்த தொடரின் பெரிய வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தொடரின் நாயகி கண்ணம்மா என்கிற காதாபாத்திரம். இத்தொடரில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ரோஷினி. இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர். மேலும் இதுதான் அவருக்கு முதல் சீரியலும் கூட.
இந்த தொடரில் இவர் மிகவும் திறமையான பெண்ணாக, எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல், தனி பெண்ணாக வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை ரசிர்களிடயே வெளிப்படுத்தும் வகையில் இவரின் நடிப்பு உள்ளது. இதனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளாமே உள்ளது. இந்தத் தொடர் சமீப காலமாக நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் போய் கொண்டு இருக்கிறது.
மேலும் சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார் ரோஷினி. அந்த வகையில் ரோஷினி பாவடை தாவணியில் அவரது அழகினை காட்டி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.