மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலுக்கு சென்ற பிரபல நடிகை விபத்தில் சிக்கி மரணம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
கன்னட திரையுலகில் சீதாராம் என்ற பிரபல இயக்குனர் இயக்கத்தில் மகளு ஜானகி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை ஷோபா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகல்கோட் மாவட்டம் பதாமி என்ற ஊரில் உள்ள பானாசங்கரி என்ற கோவிலுக்கு காரில் சென்றுள்ளார்.
மேலும் அவருடன் உறவினர்கள் 7 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் சார் சித்ரதுர்கா பகுதியில் குஞ்சினகனலு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது. எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த டிரக் ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நடிகை ஷோபா உட்பட அவருடன் சென்றிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் இரு குழந்தைகள் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொலைக்காட்சி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.