மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இரத்தம் வந்து கதறினாலும் அவன் விடமாட்டான்" - முன்னாள் கணவர் குறித்து பரபரப்பு தகவலை அம்பலப்படுத்திய நடிகை.!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் தொடரின் மூலமாக அறிமுகமாகி, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானார். இவர் தனது விவகாரத்தை பகிரங்கமாக அறிவித்து ஆனந்த கூச்சலிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது விவகாரத்திற்கான காரணம் தொடர்பாக அவர் பேசுகையில், "எனது முதல் திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை. சில மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தோம். பின் ரியாஸுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.
அவர் என்னை நல்லபடியாக கவனித்துக்கொண்டதால் காதல் வயப்பட்டு திருமணம் செய்தோம். திருமணமான புதிதில் நல்லபடியாக கவனித்துக்கொண்டவர், பின்னாட்களில் என்னை கொடுமை செய்ய தொடங்கினார்.
என்னை திருமணம் செய்ததால் நட்பு வட்டாரங்கள் இல்லை என கூறி, அவருடன் சேர்ந்து என்னையும் மதுபானம் அருந்த வற்புறுத்தினார். போதையில் என்னை அடித்து, அதனால் இரத்தம் வந்தால், உன்னால் தான் உன்னையே அடித்தேன். எதற்காக இரத்தம் வருகிறது? என கேட்டு அடிப்பார்" என்று கூறினார்.