Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
செம மாஸ் லுக்! வேற லெவலில் இருக்கும் சிம்பு! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், ஹீரோவாகவும் அவதாரமெடுத்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் மாஸாக நடித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாரான இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவிவந்தது. இதற்கு அவரது உடல் எடை பெருமளவில் அதிகரித்ததுதான் காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சிம்பு உடற்பயிற்சிக்கு பிறகு தனது உடல் எடையை நன்கு குறைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் மாநாடு திரைப்படத்தில் மீண்டும் அசத்தலாக நடித்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. மேலும் அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் துபாய் சென்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.