"ஷ்ரேயா கோஷலையே மயக்கிய பெண்ணின் குரல்!" பியூர் ப்ளிஸ் என்று பதிவிட்ட ஸ்ரேயா கோஷல்!



Singer sherya goshal twitter post

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, வங்காளி, அஸ்ஸாமி, ஒரியா, போஜ்புரி, பஞ்சாபி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பின்னணி பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல். ஹிந்தியில் சஞ்சய் லீலா பன்சாலியின் "தேவதாஸ்" படத்தில் தான் முதல் பாடலைப் பாடினார் ஸ்ரேயா கோஷல்.

shreya

இதையடுத்து தமிழில் 2002ம் ஆண்டு "ஆல்பம்" திரைப்படத்தில் செல்லமாய் செல்லம் பாடலைப் பாடினார். தொடர்ந்து தமிழில் முன்பே வா அன்பே வா, அய்யய்யோ ஆனந்த அவஸ்தை, மஜா மஜா, உருகுதே மருகுதே, ஒரு வெட்கம் வருதே, மன்னிப்பாயா உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் தனது இனிமையான மயக்கும் குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ள ஷ்ரேயா கோஷல், சமீபத்தில் ஆர். பார்த்திபன் இயக்கிய "இரவின் நிழல்" படத்தில் பாடிய "மாயவா தூயவா" பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

shreya

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், "தி பியூர் ப்ளிஸ்" என்ற கேப்ஷனுடன், கண் தெரியாத ஒரு பெண் பாடும் "மாயவா தூயவா" பாடலைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அந்தப் பெர்ணனுடன் ஒரு இளைஞரும் அந்தப் பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.