மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாளன்று டான் படக்குழு கொடுத்த பரிசு! நெகிழ்ந்துபோன சிவகார்த்திகேயன்!! வைரலாகும் புகைப்படங்கள்!!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால், முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் டான் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்முருகன் நடிக்கவுள்ளார். மேலும் அவர்களுடன் எஸ் ஜே சூர்யா,முனீஸ்காந்த், பாலசரவணன், குக் வித் கோமாளி ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
Happy moments from the sets of #DON while celebrating the birthday of our very own @Siva_Kartikeyan sir 🥳#HBDPrinceSivaKarthikeyan@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @thondankani @sooriofficial @dop_bhaskaran pic.twitter.com/lFJnSPe5Lj
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 17, 2021
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று தனது 36வது பிறந்தநாளை டான் படக்குழுவினருடன் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது படக்குழுவினர் சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படத்தை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளனர். அதாவது சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள் மற்றும் தாய் தந்தையுடன் இருப்பது போன்ற ஓவியத்தை அவருக்கு பரிசாக கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.