#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ் சினிமாவே மறக்க முடியாத ஒரு நடிகர் அவர்!! நடிகர் சிவகார்த்திகேயன் யாரை சந்தித்துள்ளார் பாருங்க!!
நடிகர் சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் கவுண்டமணியை சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்தவர் கவுண்டமணி. ரஜினி, சத்யராஜ், பிரபு, கார்த்திக் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் பல படங்கள் மாபெரும் வெற்றிபெறுவதற்கு கவுண்டமணியும் ஒரு காரணமாக இருந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த அவர், தற்போது வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதில்லை. இந்நிலையில் நடிகர் சிவகார்த்தியேகன் நடிகர் கவுண்டமணி அவர்களை சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், "கவுண்டமணி அவர்களை சந்தித்த திருமணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்த நாளை தன்னால் மறக்க முடியாது" எனவும் சிவகார்த்திகேயன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.