மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கையில் உலகஉருண்டையுடன் சிவகார்த்திகேயன்! SK20 படத்தின் தலைப்பு என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஸ்டாராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர் மற்றும் டான் இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. SK20 படத்திற்கு பிரின்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் கையில் உலக உருண்டையுடன் அமர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.