ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
இந்த சின்ன குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சினேகா.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சினேகா.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சினேகா, சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் போட்டோ சூட் செய்து பதிவிட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில், சினேகாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சினேகா சிறு வயதிலும் இவ்வளவு அழகா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.