மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்ரீ தேவி மகளை கவலையில் ஆழ்த்திய ஒற்றை வார்த்தை.!
ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பலமொழிகளில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாக இருந்தவர். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் என்பவருடன் 1996 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் என்பவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இப்டத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருது, சிறந்த நடிகைக்கான விருது உள்ளிட்டவை பரிந்துரைக்கப்பட்டது. இவர் நடிப்பினாலும் திறமையினாலும் மட்டுமே முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிலையில் தமிழில் வெளியாகிய கோலமாவு கோகிலா படத்தை ஹிந்தி மொழியில் ரீமேக் செய்து, அதில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
என்னதான் தனது திறமையை காட்டி நடித்தாலும் இவரது நடிப்பு பெரிதளவில் பேசப்படவில்லை என்பதற்கு அவரது வாரிசு நடிகை என்ற பெயர்தான் காரணம் என கூறப்படுகிறது. சமீபத்திய தொலைக்காட்சி பேட்டியில் ஜான்வி கபூர் பேசிய போது, வாரிசு நடிகை என்ற வார்த்தை சொல்லி அவரை அழைப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.