மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரீதிவ்யாவா இது! சிறுவயதில் இந்த பிரபலத்துடன் நடித்துள்ளாரா - புகைப்படம் இதோ.
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏரளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில்,பெங்களூரு நாட்கள்,மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா சிறுவயதில் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.