மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென்று பாங்காக் புறப்பட்டு சென்ற விஜய்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை அளித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் விஜய்.
சமீபத்தில் இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லியோ' இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு திரையரங்கில் வெளியாகி வெற்றிநடை போட்டுவருகிறது. படம் வெளியானதிலிருந்து இன்று வரை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனை அடுத்து சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. வெற்றி விழாவில் நடைபெற்ற நிகழ்வுகளும், இளைய தளபதி விஜய் கூறிய குட்டி ஸ்டோரியும் இணையத்திலும், திரை துறையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தளபதி 67' என்ற தற்காலிக தலைப்பில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பிற்காக அவசரமாக பாங்காக் புறப்பட்டு சென்றுள்ளார் விஜய். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.