நடிகை சுகன்யாவின் நெற்றியில் என்னவென பார்த்தீர்களா! அளவற்ற பக்தியால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்!



suganya-draw-sriram-picture-in-her-forehead

தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார்.

 இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  நடிகை சுகன்யா வெள்ளித்திரையில் மட்டுமின்றி தமிழில் சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். கடவுள் பக்தி ஆல்பங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தியில் நில விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று அடிக்கல் நாட்டு விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பலரும் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில் நடிகை சுகன்யா கடவுள் ராமர் மீது தனக்கிருந்த பக்தியை வெளிப்படுத்தும் விதமாக தனது நெற்றியில் இராமரின் உருவப் படத்தை வரைந்துள்ளார். மேலும் அத்தகைய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெய்ஸ்ரீராம் எனக்கூறி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.