அதற்காகவே புது சேனல் தொடங்கும் சன் டிவி குழுமம்.. கலாநிதிமாறன் பக்கா பிளான்.!



sun tv groups started new channel as sun hollywood

சன் டிவி நிறுவனரான கலாநிதி மாறன் மேலும் ஒரு புதிய சேனலை துவங்க உள்ளதாக தற்போது தகவல் வெளிவந்து இருக்கிறது. 

சன் ஹாலிவுட்:
சன் டிவி குரூப்ஸ் சின்னத்திரை ரசிகர்களை பொழுதுபோக்கும் வகையில் பல்வேறு சேனல்களை நடத்தி வருகின்றது. அடுத்த கட்டமாக ஹாலிவுட் ரசிகர்களை எண்டெர்டெயின் செய்யும் நோக்கில் ஹாலிவுட் படங்களுக்கு என தனிப்பட்ட ரீதியில் சன் ஹாலிவுட் எனும் ஒரு புதிய சேனலை நிறுவனம் துவங்க உள்ளது. 

sun groups

24 மணி நேரமும் ஹாலிவுட் படம் :
ஆக்ஷன் மற்றும் ஹாரர் படங்களுக்கு பெயர் போனது ஹாலிவுட். அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு நிறைய தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களை மனதில் வைத்து தான் இந்த சேனலை சன் டிவி குழுமம் தயார் செய்துள்ளதாம். தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிய ஹாலிவுட் படங்கள் 24 மணி நேரமும் சன் ஹாலிவுட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 

தனித்தனி சேனல்கள் :
ஏற்கனவே படங்கள், இசை, சீரியல்  மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என தனித்தனியாக சேனலை துவங்கி சன் டிவி குரூப்ஸ் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த சன் ஹாலிவுட் சேனலும் பெரிய அளவில் அவர்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் என்பது மறுக்க முடியாதது.