மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா....! கொண்டத்தில் சிவகார்த்திகேயன்....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டான். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள டான் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் நடிகர் ரஜினி டான் திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது "சூப்பர் பா, நல்ல நடிப்பு, கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை" என சொன்னதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.