#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு போட்டி போடும் இயக்குனர்கள்.. அடடே இவர்களா?
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசூல் சாதனை படைத்து வரும் அவரை சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் டைட்டிலை வைத்து சமீப காலமாக பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் என்று படத்திற்கு டைட்டில் வைக்க முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது புதிய திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பை வைக்க ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ் எஸ் குமரனும் இந்த டைட்டிலை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.