இளம்பெண்ணின் வயிற்றில் கை வைத்த 'ஐ' பட நடிகர்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!



suresh-gobi-blessed-pregnant-lady

மலையாள திரையுலகில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் சமஸ்தானம், தீனா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'ஐ' படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சுரேஷ் கோபி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரபல அரசியல் கட்சி ஒன்றிற்கு ஆதரவாக கேரளாவில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

election

அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் கைவைத்து பெண்ணிற்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும்  ஆசிர்வாதம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

 இந்நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் பலர், யார் என்று தெரியாத ஒரு பெண்ணின் வயிற்றில் எப்படி சுரேஷ்கோபி கை வைக்கலாம் என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக களமிறங்கிய சுரேஷ் கோபியின் ரசிகர்கள் சிலர், ஒரு அண்ணனாக தங்கையாக நினைத்து அப்பெண்ணின் வயிற்றில் கை வைத்து அவர் ஆசீர்வாதம் செய்துள்ளார். இதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.