மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை கொல்லபோறாங்க! குரல் கேட்குது.. நடுங்கிய நடிகர் சுஷாந்த்! பயந்து விலகிய காதலி! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!
தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயது நிறைந்த சுஷாந்தின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டின் உதவியாளரும், எழுத்தாளருமான சுஹ்ரிதா செங்குப்தா சுஷாந்த் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் நான் முதன்முதலாக சுஷாந்தை மகேஷ் பட்டின் நிறுவனத்தில்தான் சந்தித்தேன். மகேஷ் பட்டின் சதக் 2 படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு அவர் வந்தார். அவர் குவான்டம் பிசிக்ஸ் முதல் சினிமா வரை நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மனநலம் மோசமடைவதை பார்த்த மகேஷ் பட் சிகிச்சை எடுக்காமல் இது சரியாகாது என்று பலமுறை கூறியுள்ளார். ஆனால் அதனை சுஷாந்த் கேட்கவில்லை. இந்நிலையில் அவரது மன அழுத்தம் மோசமடைந்தது தெரிந்தும் சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி அவருடனேயே இருந்தார். மருந்து, மாத்திரைகளை சாப்பிடுமாறு ரியா, சுஷாந்தை தொடர்ந்து காட்டாயப்படுத்தி வந்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
மேலும் கடந்த ஒருவருடமாக அனைவரின் தொடர்பிலிருந்தும் சுஷாந்த் விலகியுள்ளார். இந்நிலையில் நாளடைவில் சுஷாந்தின் தலைக்குள் குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளது. மக்கள் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார் என அடிக்கடி கூறியுள்ளார். மேலும் ஒரு நாள் சுஷாந்த் வீட்டில் அனுராக் கஷ்யப்பின் படம் பார்த்து கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அவர் ரியாவிடம், நான் கஷ்யப்பின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். தற்போது அவர் என்னை கொலை செய்ய வரப் போகிறார் என்று பயந்தவாறே கூறியுள்ளார். இதனை கேட்ட ரியா பயந்துள்ளார்.அதனை தொடர்ந்து சுஷாந்தின் அக்கா வரும் வரை காத்திருந்த ரியா பிறகு அவரைவிட்டுச் சென்றார். சுஷாந்தின் அக்கா கூறியும் அவர் மருந்து, மாத்திரையை சாப்பிடவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் தனிமையில் இருந்த நிலையிலேயே அவர் மனம்வெறுத்து இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது