பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமன்னாவையும் விட்டு வைக்கலையா! வெளியான தகவலால் செம ஷாக்கில் பிரார்த்திக்கும் ரசிகர்கள்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, நாளுக்குநாள் பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் சாமானியர்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் சிலர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமன்னா தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்புக்காக அவர் ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிந்த நிலையில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமன்னா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலரும் பிரார்த்தனைகள் மேற்கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.