பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
56 வயதிலும் இளமை குறையாமல், மேக்கப் இல்லாமல் செம சிம்பிளாக இருக்கும் நடிகை நதியா!! லேட்டேஸ்ட் போட்டோஸ் இதோ
தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் உயிரே உனக்காக , நிலவே மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை நதியா. தற்போது துளிகூட மேக்கப் இல்லாமல் வீட்டின் முன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றுவரை இளமை குறையாமல் இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.