மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஸ்வாசத்தை தொடர்ந்து அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படம்; உற்சாகத்தில் ரசிகர்கள்.!
போனிகபூா் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் தயாராகவுள்ள எகிப்து திரைப்படத்தின் ரீ மேக்கில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித். நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கிற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிங்க் படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று.
இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான PINK படத்தின் ரீமேக் படமாகும். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை டாப்ஸி நடித்த கேரக்டரில் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.
விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றதால் அஜித்-சிவா கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் மீண்டும் போனிகபூா் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்க உள்ளதாகவும், இயக்குநா் சிவா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் எகிப்து நாட்டு திரைப்படமான ஹெப்டா தி லாஸ்ட் லெக்சா் என்ற படத்தின் ரீ மேக் என்று சினிமா வட்டாரங்கள் தொிவிக்கின்றன.
ஆனால் தற்போது வரை அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் அஜீத்தை சிவா இயக்குகிறாா் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.