ஒரு வழியாக செம மாஸாக வெளியானது மெகா அறிவிப்பு! உச்சகட்ட குஷியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!



thalapathy 65 movie announcement released

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய்யின் 64வது திரைப்படம் மாஸ்டர். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாவது தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 65 வது படத்தை இயக்கபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. மேலும் அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கிய நிலையில் சம்பளப் பிரச்சினை காரணமாக ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.