மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் தளபதி 68 படமா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கடந்த மாதம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது விஜய் நடித்த "லியோ" திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் "ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ்" என்ற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களின் ரீமேக்கில் நடித்து வந்த விஜய், தற்போது ஹாலிவுட் படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் "தளபதி 68" படம் "லூப்பர்" என்ற ஹாலிவுட் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
ஹாலிவுட் இயக்குனர் ரியான் ஜான்சன் இயக்கத்தில் வெளியான படம் தான் "லூப்பர்". இது ஒரு டைம் ட்ராவல் கதை என்பது கவனிக்கத்தக்கது. அதாவது எதிர்காலத்தில் யாரையாவது பழி வாங்க வேண்டுமென்றால், கடந்த காலத்திற்கு சென்று, அப்போதே அவர்களை போட்டுத்தள்ளுவது தான் லூப்பர் படத்தின் கதை.
பொதுவாகவே வெங்கட் பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் இருக்கும். இந்நிலையில் விஜயை வைத்து இயக்கும் படம் லூப்பர் படத்தின் கதையா? அல்லது வேறு ஏதேனும் ஹாலிவுட் படத்தின் கதையா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.