மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென தடுக்கி விழுந்த தளபதி விஜய்.. தாங்கிப்பிடித்த நிர்வாகிகள்.! தீயாய் பரவும் வீடியோ.!!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் களத்தில் நின்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது.
இந்நிலையில் நடிகர் விஜய் நெல்லையில் இன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகையில் வைத்து நிவாரண உதவிகளை வழங்க நேரில் கலந்து கொண்டார்.
அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் அரங்கத்திற்குள் வந்ததும் கதவு உடனடியாக மூடப்படவே, நிலை தடுமாறிய விஜய் கீழே விழவிருந்தார்.
விஜய் அண்ணா
— Bindra RD ツ (@Bindra_Off) December 30, 2023
எனக்குன்னே வருவீங்களா டா 😭😂 pic.twitter.com/wR2o0f2p7c
அப்போது அருகிலிருந்த நிர்வாகிகள் உடனடியாக சுதாரித்து விஜயை தாங்கிப் பிடித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன.