திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீண்டும் இணைந்த தனுஷ்- ஐஸ்வர்யா.! அதுவும் யாருக்காக பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையையே கலக்கி வருபவர் நடிகர் தனுஷ். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வரும் இவரது கைவசம் தற்போது எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. தனுஷ் ஜவஹர் இயக்கத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து தனிதனியாக இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
பிரிந்ததற்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர்களது மூத்த மகன் யாத்ரா பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் யாத்ராவை அரவணைத்துக்கொண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மகிழ்ச்சியோடு உள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.