அடேங்கப்பா.. போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் மதிப்பு இவ்வளவா! வாயைபிளந்த ரசிகர்கள்!!



thanush-new-house-estimation-is-80-crores

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது தமிழ், ஹிந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் களமிறங்கி செம பிஸியாக உள்ளார். அவரது கைவசம் தற்போது தமிழில் கர்ணன், இயக்குனர் கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற  படங்கள் உள்ளன.

இதற்கிடையே தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் தனது மாமனாரான நடிகர் ரஜினி வசித்துவரும் போயஸ் கார்டன் வீட்டின் அருகிலேயே இடம் வாங்கி புதிதாக வீடு கட்ட உள்ளாராம். மேலும் இதற்காக சமீபத்தில் பூமிபூஜை விழா நடைபெற்றுள்ளது.

Dhanush

இந்த நிலையில் நடிகர் தனுஷ் போயஸ்கார்டனில் கட்டவிருக்கும் வீட்டின் மதிப்பு குறித்து தற்போது தகவல்கள் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் தனுஷ் கட்டவிருக்கும் புதிய வீட்டின் விலை மதிப்பு 80 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிநவீன வசதிகளுடன் அந்த வீடு கட்டப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.