கெத்து காட்டும் தனுஷின் திருச்சிற்றம்பலம்.! 15 நாளிலேயே வசூல் இவ்வளவா?? வெளிவந்த சூப்பர் தகவல்!!
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல மொழிகளிலும் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் தனுஷ். அவர் யாரடி நீ மோகினி வெற்றிபடத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகள் கழித்து நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் ஜூலை 18 திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 15 நாட்களிலேயே உலகம் முழுவதும் 110 கோடி வசூல் செய்தது. தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருசிற்றம்பலம் திரைப்படம் 130 கோடி வசூல் செய்யும் என கூறப்படுகிறது.