#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தவாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது இவர்தானாம்? வெளியில் கசிந்த ரகசியம்!
நடிகர் கமலகாசன் தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் சீசன் ஓன்று மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாவது சீசன் தொடங்கி அது முடியும் தருவாயில் உள்ளது.
இதன் ஆரம்பத்தில் மக்கள் அவ்வளவாக சீசன் இரண்டை விரும்பவில்லை. ஆனால் போட்டியின் இறுதி நாட்கள் நெருங்க நெருங்க மக்களிடமும் ஆர்வம் தொற்றி கொண்டது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் நடக்கும் எலிமினேஷனில் கடந்த வாரம் டேனியல் வெளியேறினார். இந்தவாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவர் என மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் மிகவும் தந்திரமாக செயல்பட்டு பிக் பாஸ் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டார். அடுத்தவாரம் நடக்க உள்ள நேரடி எலிமினேஷனில் தங்களை காப்பாற்றிக்கொள்ள பிக் பாஸ் அனைவருக்கும் ஒரு டாஸ்க் குடுத்தார். இதில் ஐஸ்வர்யா நடிகர் சென்றாயனை சமாதானம் செய்து அவரது தலையில் சிகப்பு கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும். ஆனால் ஐஸ்வர்யா அவரிடம் பொய் சொல்லி அவரது தலையில் பெயிண்டை அடித்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவை வெளியேற்றவேண்டும் என்று ஆவலுடன் இருந்தனர். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பாற்றப்படுவதாக கமலகாசன் அறிவித்தார்.
இதனால் இந்தவாரம் யார் வெளியேறப்போவது என்று ரசிகர்கள் அவளுடன் காத்திருக்க அது நடிகர் சென்ட்ராயன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் சென்ட்ராயன் இந்தவாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.