Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
ராதிகா எனக்கு அம்மா கிடையாது..! நான் அவரை இப்படித்தான் அழைப்பேன்.! அதிரடியாக பேசிய வரலட்சுமி சரத்குமார்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார். போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நாயகி, வில்லி என தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
இவர் நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவராவார். இந்நிலையில் சரத்குமார் பிரபல தமிழ் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். தனது தந்தையின் இரண்டாவது மனைவி ராதிகா பற்றி பேசியுள்ள வரலக்ஷ்மி, ராதிகா அவர்களை நான் ஆண்ட்டி என்றுதான் அழைப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றிய விளக்கம் கூறிய அவர், அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். அதனால் ராதிகா அவர்கள் எனக்கு அம்மா கிடையாது, அவர் எனக்கு ஆண்ட்டி தான். நான் அவரை எனது தந்தை சரத்குமார் அவர்களுக்கு ஈடாக மரியாதையை வைத்து இருக்கிறேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.