திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் வீட்டில் பச்சோந்தி இவர்தான்! வீட்டை விட்டு வெளியேறிய வேல்முருகன் கூறிய பகீர் தகவல்! செம ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தொடங்கி இன்றுடன் 32 நாட்களாகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல், சண்டை, அன்பு, அக்கறை என எதற்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்தில் முதன்முறையாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வேல்முருகன் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா கலந்துகொண்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேல்முருகன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது பிக்பாஸ் வீட்டில் பச்சோந்தி யார் என கேள்வி எழுப்பியதற்கு, அவர் உடனே ரம்யா பாண்டியன் என கூறியுள்ளார்.
அப்பொழுது அவர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் சார் முன்பு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறி ரம்யா பாண்டியன் நடிக்கிறார் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.