பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா!



Venkatprabhu villan

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமாவில் மிக சிறந்தவர்களாக நிகழ்கின்றனர். மேலும் இவர் அஜித்,சூர்யா, கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய சென்னை 28,சரோஜா, கோவா, மங்காத்தா, மாஸ், சென்னை 28 பார்ட் 2 போன்ற வெற்றி படங்களை இயக்கினார். ஆனால் தற்போது இவர் இயக்கிய பார்ட்டி என்ற படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

இதன் காரணமாக வெங்கட் பிரபு தற்போது இவர் நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் லாக்கப் என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சிறந்த இயக்குனராக இருந்த வெங்கட்பிரபு தற்போது வில்லனாக நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டது ஏன் என இன்னும் தகவல் வெளியாகவில்லை.