மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிம்மதியா இருந்தேன்.. அந்த போட்டோதான் பிரச்சினைக்கு காரணம்.! ஆதங்கத்தை உடைத்த நடிகை விசித்ரா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை விசித்ரா. வயது மூத்தவராக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சிறப்பாக விளையாடினார். நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டார்.
அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது தனக்கு பிரபல முன்னணி நடிகரால் நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். இந்நிலையில் நடிகை விசித்ரா அண்மையில் பேன்ஸ் மீட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே எனக்கு நடந்த கொடுமைகளை குறித்து பேசுவேன் என கூறி இருந்தேன். உடனே என் குடும்பத்தினர்கள் அதையெல்லாம் கூற வேண்டாம் என சொல்லி அனுப்பினர்.
அவற்றையெல்லாம் மீறி நான் கூறியதற்கு காரணம் இனிமேல் எந்த பெண்ணுக்கும் இதுபோல நடக்கக்கூடாது என்பதற்காகவே. நான் 23 வருடம் கழித்து இதுகுறித்து பேசியுள்ளேன். எனவே நாம் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டால் எத்தனை வருடம் ஆனாலும் அந்தப் பெண் ரிவெஞ்ச் எடுப்பார் என அனைவரும் யோசிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் நிம்மதியாக இருக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் எதற்கு பயப்பட வேண்டும்.
சிலர் அப்படி ஒரு விசயம் நடக்கவில்லை. அவர் கதை கூறுகிறார் என்றெல்லாம் கூறினார்கள். என்னை நானே கேவலப்படுத்தி கொள்வதற்கு எனக்கு அறிவில்லையா? என கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நான் திருமணம் ஒன்றில் எனது தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெருமளவில் வைரலானது. அந்த புகைப்படத்தால் தான் எனக்கு பிரச்சினையை ஆரம்பித்தது. நிம்மதியாக இருந்தேன். மீண்டும் சினிமாவிற்கு வர அந்த புகைப்படம்தான் காரணம் என கூறியுள்ளார்.