15 Years of Pokkiri... அன்றும், இன்றும் இளையதளபதியின் இமாலய வெற்றிப்படம்..!



Vijay Pokkiri Movie 15 Years Celebration today

இளையதளபதி விஜய், அசின், வடிவேல், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர் உட்பட பல திரையுலக நடிகர்களின் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 12 ஜனவரி 2007 அன்று வெளியானது. போக்கிரி படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார். 

vijay

இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் அமோக வெற்றி அடைந்தது. மேலும், படத்தில் இருந்த வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் வரவேற்பை பெற்று வருகிறது. ரௌடியிசத்தை ரௌடிகளுக்கு தெறியாமல் அவர்களுடன் சேர்ந்து ஒடுக்கும் ரௌடி - காவல்துறை அதிகாரியாக விஜய் நடித்திருந்தார். 

vijay

கடந்த 2006 ஆம் வருடம் தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படம், 2007 இல் தமிழ் மொழியில் விஜய் நடிப்பில் வெளியானது. 200 நாட்கள் தொடர்ந்து திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம், இங்கிலாந்தில் Blu-Ray தயாரிப்பில் 2009 ஆம் வருடம் வெளியிடப்பட்டு அங்கும் வெற்றி அடைந்தது. கடந்த 2019 ஆம் வருடம் போக்கிரி டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 

vijay

கடந்த 12 ஜன. 2007 அன்று வெளியான போக்கிரி திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் 142 திரையரங்கில் ஒரு வாரத்தில் ரூ.6 கோடி அளவில் சம்பாரித்து. அன்றைய நாளில் தான் அஜித்தின் ஆழ்வார், விஷாலின் தாமிரபரணி திரைப்படங்களும் வெளியானது. ஆனால், வசூல் மற்றும் வரவேற்பு ரீதியாக போக்கிரி அமோக வெற்றியை அடைந்தது. 

vijay

தமிழ்நாடு மற்றும் கேரளா பாக்ஸ் ஆபிசில் அந்நியன் திரைப்படத்திற்கு பின்னர், அந்நியன் திரைப்பட சாதனையை முறியடித்த திரைப்படமாக போக்கிரி இருந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த மற்றும் இயக்கிய பாபு தேவா, வடிவேல் ஆகியோருக்கு விஜய் அவார்ட்ஸ் மற்றும் விகடன் சிறந்த காமெடி நடிகர் விருதுகள் கிடைத்தன.