#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. தளபதி 65 படத்திற்காக, வேற லெவல் லுக்கில் செம ஹேண்ட்சம்மாக மாறிய விஜய்! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவருக்கென நாடு முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் என்ன செய்தாலும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி ட்ரெண்டாக்குவர்.
இந்நிலையில் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனது 65வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் பூஜை விழாவும் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர. நடிகர் விஜய்யும் அசத்தலாக கலந்துகொண்டுள்ளார்.
தளபதி 65 படத்திற்காக லைட்டாக வெயிட் போட்டு, ஹேர் ஸ்டைல் மாற்றி, செம ஹேண்ட்சம்மாக மாறிய நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் செம உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் அதனை வைரலாக்கியும் வருகின்றனர்.